Wednesday, October 8, 2008

அழகர் கோவில்

அழகர் கோவில் என்றால எங்கள் சமூகம் தான் ஞாபகம் வருகிறது. பொங்கல் சமயம் ஊர் பக்கம் செல்வோம். எங்களில் பல வித உள் ஜாதி கலப்புகள் உள்ளன. இருந்தாலும் அய்யா அவர்கள் முயற்சியால் ஒன்றானது. இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு இரண்டு டீ கிளாஸ் முறை இன்னும் எங்கள் கிராமங்களில் இருபது வேதனை தருகிறது. நான் டீ கடைக்கு செல்லா விட்டாலும், அங்கு இடம் இருந்தாலும், தரையில் உட்கார்ந்து குடிக்கும் சோகம் பார்த்துள்ளேன். இதற்கும் பெஞ்ச் இருக்கும். கோவையில் எங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் ஒரு மேல்ஜாதி, மற்றும் ஒரு கீழ் ஜாதி. நாங்கள் உபயோகிக்கும் ப்ளேட், தம்ப்ளர்ஸ் தான் யூஸ் செய்வார்கள். வெரி நீட் பீபில். அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு எல்லாம் சென்றுள்ளோம்.

இந்த ஜாதி வகையெல்லாம், ஒருவன் மற்றவனை தாழ்த்தி வைக்க ஏற்படுத்தி இருக்கும் ஒரு சாஸ்திரம். சாஸ்திரங்கள் பரப்பும் பிராமணர்கள், அவர்களுக்கு தான் தானம் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்துள்ளது, ஒரு recurring return of investments செய்ய!

தமிழ்நாடு கவர்மன்ட் எனக்கு பி.சி. சர்டிபிகட் கொடுத்தார்கள். என் தங்கைக்கு எம்.பி.சி. எங்கே போய் சொல்வது? நான் எஞ்சினீரிங் சீட் வாங்க அலைந்தது, ரொம்ப கஷ்டம். ரேகோமண்டேசன் வேலை செய்யவில்லை. என் குழந்தைகள் என்று வரும் போது...

Like what Martin Luther King Jr. said... "..I don't want them to be judged by their color of skin, but by the content of their character ".

Politicians are so cynical in giving their own the best, if not the best!

எங்க பாட்டிக்கு மதுரை. எங்க தாத்தா தேனி சைட். எங்க அப்பாவுக்கு தெரிஞ்சவர் ஒரு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர். அவரை நான் சந்திச்சது, அழகர் கோவில் , மதுரை. ரொம்ப சாந்தமான மனிதர். அவங்க தம்பி தான், எங்க தோட்டத்திலே இருக்கிற, பழைய சந்தன மரங்கள் எல்லாம் வாங்கியது. இருபது வருஷம் ஆன மரங்கள், சுமார் ஐம்பது கிலோ சந்தன கட்டை கொடுக்கும். ஒரு கிலோ சந்தனம் முப்பதாயிரம் ருபாய். எதற்கு கோவேர்ந்மன்ட் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறது என்று தெரியவில்லை. எங்கள்
கான்னக்டிகட் சம்மர் ஹவுசில், நாற்பது மரம் வைத்துள்ளேன். நன்றாக வளர்கிறது. இங்கேயே தான் கிடைத்தது. ஹாரிஸ்பர்க் போன்ற இடங்களில், மரம் எடுத்து கொள்வார்கள். என் வயதான காலத்தில் பார்க்கலாம்!

சின்ன வயதில் என் வயதான கொள்ளு தாத்தா மீது இரண்டு ஆட்கள் ஏறி நின்று மசாஜ் செய்தது.. உருண்டு திரண்ட கரும் உடம்பு..தொன்னூறு வயது.. என் கொள்ளு பாட்டி மட்டும் தான் மனைவி. அப்புறம் செட் அப்ஸ் ஒன்னோ ரெண்டோ! தொன்னூற்றி நான்கு வயதில் அவர் செத்த போது, அவரோடு இருந்தது, அவர் விரும்பிய ஒரு பெண். பத்து ஏக்கர் நிலம் எழுதி வைத்திருந்தார். இதல்லாம் சகஜம். அப்படி இல்லேனால் தான், சம்திங் ப்ரோப்ளம் என்று நினைப்பார்கள் அந்த காலத்தில் என்று அம்மா சொன்னார். ;-)

நேற்று நன்றாக தூங்கினேன்.
தொடர்ச்சியாக முப்பத்தி ஆறு மணி நேரம் தூங்காமல் ... கின்னஸ் நோட். வயிறு கட்டிக் கொண்டது. டாக்டரிடம் செல்ல வேண்டும்.

வேலைக்கு சீக்கிரம் வந்து விட்டேன். சாயந்திரம் சீக்கிரம் செல்ல வேண்டும். ஆயுத பூஜை.

1999.

எதிர்பாராது சந்திப்புகள் நிகழ்ந்த வருடம்.

வீடு வாங்க ஒப்பந்தம். பெசெமன்ட் மட்டும் என்பது மீடேர். கிழே கார் பார்க் மற்றும் ஹெல்த் கிளப். கட்டிடம் முன்னூறு மீடேர் உயரம். எழுபத்தி ரெண்டு மாடிகள். வீடு பார்க்காமலே வாங்கினோம். வடக்கு வாசல். நான் ரசித்த மாதிரி ஒரு கார்னர். இரண்டு பக்கமும் நிறைய சன் லைட்.

நாங்கள் முதலில் புக் செய்த வீடு எழுபதாவது மாடி. பெண்ட் ஹவுஸ்கள் பத்து மாத்திரம் இருந்தன. இரண்டு அடுக்கு. சில பல பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்கள். நிறைய தடவை என்னை, நீ எந்த அபார்த்மன்டில் மைட் என்று கேட்டுள்ளார்கள். கொடுமை. அதனால் தான் ஆடை அங்கு முக்கியம். வைரம், நகை எல்லாம் போட்டு அழகு காட்ட வேண்டும். விரும்பி வாங்கிய வாழ்க்கை.

பிறகு கட்டாயமாக, கிட்டதட்ட அதே மாதிரி, அதே வெலைக்கு, கொஞ்சம் பெரிய ஹாலுடன் ஒரு மாடி கீழ் கொடுத்தார்கள். நான் இந்தியனாக இருந்ததால் நிகழ்ந்தது என்று சொல்லெலாம். யு.என்.அருகில் இருப்பதால், செக்கூரிட்டி க்ளீரன்ஸ் செய்தார்கள். பயம். அதுவரை நான் யு.எஸ்.பாஸ்போர்ட் வாங்கவில்லை. அடுத்த வருடம் தான் வந்தது. கிரீன் கார்டு பிறகு ஐந்து வருடம் ஆக வேண்டும்.

பணம் மாதா மாதம் கட்டினோம். வீடு கட்டும் போது சென்று பாத்தோம். சொன்ன டைம் விட கொஞ்ச நாள் அதிகம் செய்தார்கள்.

இரண்டாயிரத்து ஒன்றில் தான் வீடு கையில் வந்தது.

பூஜா ரூம் வைக்க கட்ட கலை வல்லுநர் மார்தா ஒத்துகொள்ளவில்லை. தூண் வரும் ஒரு காப்பில், சிறு மேடை அறை செய்ய சொல்லி, கோர்ட் நோட்டீஸ் அனுப்பி, மத உணர்வை மதிக்க வேண்டும் என்று சொல்லி ஆர்டர் வாங்கினேன். ஹிந்துகளின் சாமி விஷயம் அவர்களுக்கு தெரியாது.

என்ன இருந்தாலும் கற்பூரம் எற்றமுடியாது . கிச்சன் அருகில் மட்டும் ஜன்னல் ஓபன் செய்யலாம். தீ பயம். எல்லாம் பயம். திருடன் மட்டும் பயம் கிடையாது.

ஜோ நியூ யார்க் மாற்றல் வாங்கி வந்தவுடன். இரண்டு வீடுகள் மாறினோம்.

என் முன்னாலேயே அவர் நண்பர்கள் எதற்கு இவளை கல்யாணம் செய்தாய் என்று கேட்பார்கள். கொடுமை. அட் டைம்ஸ் யு ஹவே டு அக்செப்ட் பாக்ட் ஒப் யூர் ஸ்கின் கலர்.

எனக்கும் ஜோவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்படுத்திய ஒருவன். ஷங்கர். என்னை விட ஒரு மூன்று வயது சிறியவன். நைஜீரியாயில் பிறந்து வளர்ந்து (அவன் அப்பா ஒரு ஐ.எப்.எஸ். ஆபிசர் இந்தியன் கவர்மன்டில்) பல தேசம் பார்த்தவன். ஹிந்தி படம் ஹீரோ தான். இப்போது ஒரு அனலிஸ்ட் கம்பனியில் சி.ஈ.ஒ. என்று கேள்விபட்டேன்.

எங்கள் கம்பனியில் அவன் சேர்ந்தான். தமிழன் என்பதால் அவனோடு தமிழ் தான் பேசுவேன். அடிக்கடி வீட்டிற்க்கும் வருவான். ஜோ'விற்கு பிடிக்கவில்லை. நியூ ஜெர்சியில் அவன் நண்பர்களுடன் தங்கினான். ஆனால் சனி, ஞாயிறு என்று எங்கள் வீட்டிற்கு வந்து விடுவான்.

முதலில் எனக்கு பிடித்தது. தமிழன். நண்பன். அவன் தொட்டு தொட்டு பேசுவது, ஜோவிற்கு பிடிக்கவில்லை.

ஜோ ஒரு முறை கலிபோர்னியா பிசினஸ் விசயமாக சென்ற போது, நான் தனியாக இருந்தேன். அப்போது ஒரு வெள்ளி இரவு வந்தான்.

சினிமா சென்றோம். நன்றாக தான் இருந்தான். அந்த சமயம் பிரேக் அப் என்று ஒரு படம் பார்த்தோம். கதாநாயகன் ஜோ மாதிரி இருப்பான்.

அந்த நேரத்தில் ரோக்கபிள்ளர் சென்டர் அருகே இடலியானோ என்ற ரெஸ்டாரன்டில் சாப்பிட்டோம். நேரம் போனதே தெரியவில்லை. பதினொன்று ஆகிவிட்டது... அவன் என்னயே ஒரு மாதிரி பார்ப்பதாக நினைத்தேன்.

நான் போட்டிருந்த உடையா, இல்லை அமெரிக்கா வாழ்க்கையா, அவன் வளர்க்க பட்ட விதமா... தெரியவில்லை. வீடு வரை வந்தவன், என்னோடு தங்க வேண்டும் என்று கேட்டான். நான் சரி வராது என்று சொன்னேன். வீட்டிற்க்குள் நுழைந்ததும் என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டான். தள்ளி விட்டேன்.

போலிசை கூப்பிடுவேன் என்றேன். பயம் பிடித்து கொண்டது.

என்ன செய்வது. அந்த நாடு இரவில் அவனை துரத்தி விட்டேன். திங்கள் தான் தெரிந்தது, அவன் மக செய்யப்பட்ட விஷயம். பர்ஸ் போய் விட்டது. யாரோ கருப்பன் எடுத்து சென்று விட்டான். கடைசி ட்ரைன் போய் விட்டது. காலை ஐந்து வரை பென் ஸ்டேசனில் படுத்துள்ளான். நல்ல வேளை போட்டிருந்த செயின் உதவியது. அதை கொடுத்து விட்டு, ஒரு நியூஸ் பேப்பர் கடை இந்தியனிடம் கொஞ்சம் டாலர் வாங்கி வீடு சென்றான்.

திங்கள் காலை ஆபிஸ் வந்தவன் வேலை விட்டு நின்றுவிட்டான். என்னை முகம் பார்த்து பேசவில்லை. எனக்கு கஷ்டமாக போய்விட்டது.

மீண்டும் அவனை ப்லுஷிங்கில் ஒரு முறை ஒரு பெண்ணோடு பார்த்தேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.

3 comments:

சிம்பா said...

வணக்கம். முதலில் ஆயுத பூஜை வாழ்த்துக்கள். இன்று தான் தங்களது வலைதளத்தை காணும் வாய்ப்புகிடைத்தது. மிகவும் நன்றாக உள்ளது. என்னதான் வெளிநாடு போய் வசித்தாலும், இந்திய வாழ்கை முறை மற்றும் பழக்கவழக்கத்தை மறக்காமல் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பதிவும் அருமை.

மேலும் உச்சரிப்பிற்கு கடினமான வார்த்தைகளை தமிழாக்கம் செய்யாமல் ஆங்கிலத்திலேயே கொடுத்தால், படிக்க மேலும் இனிமையாக இருக்கும்.

நன்றி.

தங்கவேல் மாணிக்கம் said...

திவ்யா, ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்த்துக்கள். உங்களது கதைகளை படிக்கப் படிக்க வேதனை அதிகமாகிறது. மனிதர்கள் பிறருக்காக வாழப் படைக்கப்பட்டவர்கள் என்று நினைப்பவன் நான். ஆனால் தங்களின் பதிவு தனக்குள் சுருங்கி தனது சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நுகர்வுக் கலாச்சார வாழ்வுமுறையும் அதன் கொடுமையான பக்கங்களையும் வெளிப்படுத்துகிறது. எனது மகன் ரித்திக் நந்தா கராத்தே காம்படீஷனுக்காக சனிக்கிழமை மதியம் புறப்பட்டு ஞாயிறு விடிகாலையில் வீட்டுக்கு வந்தான். இரண்டு நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன். சாப்பாடு கூட சாப்பிடமுடியவில்லை. பிரிவுத் துயரம் என்னை வாட்டி வதைத்து விட்டது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இது தான் வாழ்க்கை. இது தான் நிதர்சனம். நாம் குழந்தையாக இருக்கும்போது பெற்றோரின் அரவணைப்பு தேவை. நாம் வளர்ந்து ஆளான பிறகு பெற்றோருக்கு நமது அரவணைப்பு தேவை. நாம் முன்னே பெறுகிறோம். பின்னே கொடுக்கிறோம். இது தான் இயற்கை. ஆனால் பாருங்கள். இங்கே என்ன நடக்கிறது. எல்லாம் தலைகீழ். அதனால் வரும் குழப்பங்கள். மன நிம்மதி அற்ற சூழ் நிலைகள். பத்து வருடம் தனது பிள்ளைகளை பிரிந்து பணம் சம்பாதிக்க தன் இளைமையினை வெளி நாடுகளில் பலி இடும் மனிதர்களைப் பற்றி நினைத்தாலே மகா வேதனையாக இருக்கிறது. பணத்தின் தேவையும் வாழ்வில் முன்னிலைப் படுத்தும் போது அங்கு மனிதர்களும், அவர்களின் உணர்வுகளும் பலியிடப்படுகின்றன.

உங்களது நண்பர் செய்தது அயோக்கியத்தனம். கடவுள் நின்று கொல்வதில்லை. உடனே தண்டனை வழங்கி விடுகிறான். இன்னும் எழுதுங்கள். படிக்க வெகு சுவாரசியமாகவும், வேதனை கலந்த உணர்வினையும் தருகிறது...

divya said...

Wonderful replies.

It is a pleasure to be on blogging.