Saturday, October 4, 2008

இன்டர்நெட்


1995.
அமெரிக்காவில் இன்டர்நெட் மிகுந்த பிரபலம் ஆனது. யாரை பார்த்தாலும்மெயில் பற்றி பேசினார்கள். எனக்கு ஒரு ஐடி கிடைத்தது. ராஜ்திவ்யா. ஹாட்மைல். ரொம்ப சந்தோசம். இப்போதெல்லாம் செக் பண்றது இல்லே. உயிரோட தான் இருக்கு. ஒரே ஜங்க் மையிலா வருது.


அப்புறம் சாட். தெரியாத ஒருவரோடு சாட் பண்றது ஒரு சுகம். நான் ஆணுனு சொல்லிடுவேன்.

அது தாங்க கடலை. பொண்ணுன்'னா வாயை இளிச்சிட்டு வருவாங்க.. அதான்..கொஞ்ச நாள் கழிச்சு வெப்காம் வந்தது. அதுனாலே எனக்கு ஜோ கிடைச்சார். அப்போ அவர் போஸ்டனில் இருந்தார்.

ஸ்லீப்லேஸ் இன் சியாட்டில் படம் மாதிரி எங்கள் காதல் கதை. 1993. நிஜமாஒரு வித காதல் அனுபவம் எல்லோருக்கும் கொடுத்தது. தேங்க்ஸ் டு டோம்ஹன்க்ஸ். என் தங்கச்சி ஆஸ்டளியாவில் இருந்து, அவளுக்கு ஒருமாப்பிள்ளை அமெரிக்காவில் பார்த்தாள்.... கடைசியிலே இந்தியாவில் தான்பிடித்தால். இப்போ அவர் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனி கோவை...சில சமயம் பாத்ரூமில் டபில் தண்ணீரில் சோக் ஆயிட்டு, அப்படியே பாட்டு கேட்டுட்டூ... ஒரு பூக் படிப்பேன். சுகம். திவ்யம். திவ்யா.

சில சமயம் போன் கால்களும் ஜோவுடன். வெட்டி பேச்சு.

சாட் மூலம் கிடைத்த நண்பி தான் ரோசா. மெக்சிகோ சிட்டி. சாப்ட்வேர் எஞ்சினீர். அப்புறம் ... இன்று அவள் பெரிய பணக்காரி. நிஜமான தோழி. அவளுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. லெபனோனில் பிறந்த ஒருவர். ஜமீல்.

எனக்கு அவள் கம்பெனியிலே ஒரு பர்சன்ட் ஸ்டாக் கொடுத்தாள். நட்புக்காக. அதை பூராம் ஒரு நாள் சாரிட்டி'கு கொடுப்பேன். இப்போ அந்த கம்பனி மதிப்பு நூறு மில்லியன் டாலர்கள். நான் அதில் ஒரு சென்ட் கூட போடலே. அட்வைஸ் மாத்திரம் தான். செசூரிட்டி சாப்ட்வேர் பண்றாங்க.

நானும் ஜோ'வும் மெக்சிகோ சிட்டி சென்றால்... ரோசா வீட்டில் தான் தங்குவோம்.
(அந்த-வீடு-அவுளோடது கிடையாது) இந்த முறை நொவெம்பரில் எங்களோடு இந்தியா வருகிறார்கள். மும்பையில் ஒரு வாரம் என் கம்பனி வேலை செய்ய வேண்டும். அப்புறம் இரண்டு வாரம் லீவு. எனக்கு வருஷம் நான்கு வாரம் லீவு. எல்லாம் சேர்த்து. அப்புறம் எல்லாம் அட்ஜச்த்மன்ட்ஸ்.


ஜோவோட லீர்ஜெட் - பன்னிரண்டு பேர் அமரலாம் - அவர் கஷ்டப்பட்டு பத்து வருடம் சம்பாரித்து வாங்கினார். இருபத்தி ஐந்து மில்லியன் டாலர்ஸ். நான் இதுவரை பதினேழு வருடங்களில் மொத்தம் அவ்வளவு சம்பாரித்தது கிடையாது.

அது ஒரு இந்வேச்ட்மன்ட்.... லோன். அதில் வருமானம் வருது. வருடம் ௨00 மணி நேரம் வாடகைக்கு போகுது. இரண்டு பைலட்ஸ். வருடம் சில முறை நாங்கள் எடுத்து சுற்றுவோம், சில நண்பர்களோடு. அப்பா அம்மா வந்த போது கனடா, அலாஸ்கா, மெக்சிகோ என்று சென்று வந்தோம். மகள் குடும்ப பிளைட். சந்தோசம்! நிறைய இந்தியன்ஸ் இது மாதிரி வைத்திருக்கிறார்கள்.


அப்புறம்... 1995 தான் முதல் முதலில் கார் வாங்கினேன். வீட்டு வாடகை (என் பங்கு ஆயிரம் டாலர்கள்) கார் பார்கிங் மாதம்
ஆயிரம் டாலர்கள். கொடுமைங்க. நியூ யார்க்கில் கார் பார்கிங் கஷ்டம். வாடகை வீட்டுலே கிடையாது... இன்னைக்கு வீட்டு வாடகை அதே இடத்தில் மாதம் மூன்றாயிரம். கார் பார்க் இரண்டாயிரம். அதுக்கு தான் எல்லோரும் ருதெர்பொர்ட். வைட் ப்லைன்ஸ். அப்படி இருக்காங்க. சொந்த வீடு.. (சப் ப்ரைம் கழுதை விடுங்க...)

அடுத்த வருஷம்... அப்புறம் என் முதல் அமேரிக்கா சுற்றி ஒரு டிரைவிங் அனுபவம் ஜோவோடு.

மீண்டும் சந்திக்கிறேன்.