ஒன்று கிரிகெட் வீரர். சச்சின். (சச்சினின் அப்பா பெயர் Ramesh?). முழுப்பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்!
மற்றொன்று என் நண்பர் (ஆர்யா ரத்தன்) ரமேஷ் டெண்டுல்கர். அவரும் பதிவுபோதைனு ப்லோக் எழுதறார். எனக்கு ப்லோக் பண்ண ஐடியா கொடுத்து அவர் தான். ப்லோக் செய்ய உதவி செய்கிறார். கிரேட். நெருங்கிய தோழர்.
நிக் நேம் சச்சின்.அது வைத்த ஒருவர், ஒருகிரிகெட் வெறியர் ப்ரோபெச்சர் மோகன், அஹாமதபாதில். ஆனால் எனக்கு தெரிந்த வரை ரமேஷுக்கு, பிடித்து பூட்பால்! விடிய விடிய 1990 வேர்ல்ட் கப் பார்த்தது தெரியும்! எம்பியே இரண்டாம் வருடம் க்ளாசில் தூங்கி வழிந்த கோஷ்டியில், அவரும் ஒருவர்!
நாங்கள் ஒன்றாக படித்த காலத்தில் தான் சச்சின் இந்தியாவிற்காக விளையாடினார்! 1989. பாகிஸ்தானுக்கு எதிராக!
ஒரு எக்ஸ்யபிசன் மாட்ச்... டிவியில் பார்த்த ஞாபகம். முதல் இருபது ஓவர் ஒன் டே மாட்ச். கடைசி ஓவரில் இருபத்தி நான்கு ரன்கள் வெற்றிக்கு அடிக்கவேண்டி இருந்தது. மூன்று ரன்களில் இந்தியா தோல்வி. கடைசி ஓவர் வீசியது அப்துல் காதர். கடைசி மூன்று பந்துகள் மூன்று சிக்ஸ்கள். அடித்தவர்? சச்சின். ஐம்பதும் அடித்தார்! அப்பொழுதே நினைத்தேன், இவர் பெரிய ஆள் ஆவார்!
I remember Gavaskar saying him as, a boy who has become a man, now.
இன்று அவர் 12000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஆபீஸில் இந்தியர்களுக்குகொண்டாட்டம். உலகத்தின் அதிகம் ரன் எடுத்தவர். நியூ யார்க் டைம்ஸ், சிலசமயம் கிரிகெட் பற்றி எழுதுவார்கள். நாளை வரும்?
1991. சிவாஜி பார்க் கிரௌண்ட் சென்று ஒரு முறை அவர் ஞாயிறுவிளையாடுவதை (சச்சினுக்கு 18 வய்து அப்போது ) பார்த்த ஞாபகம். போட்டோ எடுக்கவில்லை. அவர் அண்ணன் அஜீத், அவசரமாக அழைத்துசென்று விட்டார்.
மீண்டும் கோவையில் ஒரு வாய்ப்பு. இந்திய இங்கலாந்து அணிகள்எக்ஸ்யபிசன் மேட்ச். நேரு ஸ்டேடியம். அம்மா ரவுண்ட் டேபிள் தலைவி அந்தசமயம். எழைகள் நலனுக்கு ருபாய் ஆறு லட்சம் வசூல் செய்த கேம். விளையாட்டு வீரர்கள், பைசா எதுவும் வாங்கிக்கொள்ளவில்லை. ஊட்டி ட்ரிப்மட்டும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த மாட்சில் கவாஸ்கர் நல்லதமாஸ் செய்தார். என் காலேஜ் நண்பர் கண்ணன், கபில்தேவ் ரசிகர், ஒரு அணிக்காக பீல்டிங் செய்தார்! இப்போ நியோ ஸ்போர்ட்ஸ் சேனல் நிறுவனர்.
நானும் சில நண்பிகளும் டென்னிஸ் பால் கிரிக்கேட் பயன்களோடு ஆடியது ஞாபகம் வருது. பந்து மார்பில் பட்டு வலித்த வலி, இன்று நினைத்தாலும் வழிகிறது! (அம்மா தான் ஐயோடெக்ஸ் போட்டு நீவி விட்டார்!)
*****
Congrats Sachin!

3 comments:
Thanks Divya!
Congrats to Sachin too!
Great! 12000 is the number of the day!
சச்சின் எல்லாம் அம்பது, நூறு தான் அடிச்சுக்கிட்டு இருக்கார். நீங்களும் ரமேஷும் ஆயிரம் ஆயிரமா இல்ல அடிச்சுகிட்டு இருக்கீங்க....
anyway.... வாழ்த்துக்கள்...
Post a Comment