பத்ரகாளி.
என் கோபம் குறையாத வருடம்.
2003.
என்னை ஏமாற்றினால் ஒரு பெண்.
என் கோபம் தலைக்கு ஏறியது. திருப்பி கொடுத்தேன்.
என்னோடு வேலை செய்த பெண் ஒருத்தி, ஜுனியர், மிகவும் நல்லவள் என்று நம்பினேன். ஸ்பானிஷ். ஒரு முறை என் வீடு வந்தாள். ஆன்லைனில் கிடைத்த ஒரு பெண் நண்பி மாதிரி நினைத்து விட்டேன்.
அப்புறம் என்னோட பேங்க் அக்கவுன்டிலிருந்து சிறு சிறு தொகை காணாமல் போனது. அந்த மாதம் மட்டும் நான்காயிரம் டாலர்கள் காணோம்.
நூறு டாலருக்கு கிழே. எல்லாம் செக். நேரில் சென்று. எப்படி டெல்லர் கொடுத்தார் என்று தெரியவில்லை.
நான் முடிந்தவரை ஆன்லைன் தான்.
செக் புக் எல்லாம் கையில் இருந்தது. பாங்கில் கேட்டேன்.
அந்த செக் புக் நம்பர்கள் எல்லாம், புது செக் புத்தகம் நம்பர்கள்.
ஆக மொத்தம் நண்பி ரோசா, என் வீட்டில் என் செக் புத்தக்கங்களை, எடுத்து என்னை மாதிரி (ஆபீஸில், நான் கையெழுத்து போடும் டாகுமன்ட்ஸ் இருக்கும்) போட்டு எடுத்துல்லாள்.
அதனால் போலிஸ் இடம் சென்றேன். என் சந்தேகத்தை சொன்னேன். பாங்கில் சொன்னார்கள்.
ரோசா வரும் போது தகவல் கொடுத்தால், உடனே சென்று பிடிக்க திட்டம்.
ஒரு நாள் வெள்ளி மதியம் உணவு நேரம் கால் வந்தது. உடனே சென்றேன். அங்கு பேங்க் மானேஜர் ரூமில் அமர்ந்திருந்தாள்.
அவள் தான். பேங்க் மானேஜர் கையெழுத்து ப்ரோப்ளம் என்று சொல்லு கூப்பிட்டு இருந்தார்.
என் முன்னாலேயே அடையாளம் காட்டப்பட்டாள். என் முகத்தை அவள் பார்க்கவில்லை. வேலையும் போயிற்று. உடனே பையில் இல்லாத ஜெயில். கேஸ். நான் சென்று கோர்ட்டில் விவரம் சொன்னேன். அவள் தவறி ஒப்புகொண்டாள். மூன்று வருடம் சிறை. வாழ்க்கை போனது.
எதற்கு எடுத்தால் என்று அவள் கோர்ட்டில் சொன்னது, கொஞ்சம் ட்ரக்ஸ் கடனாம். திருப்பி கொடுத்து விடலாம் என்று இருந்திருக்கிறாள். இதுவும் மாதம் பத்தாயிரம் டாலர் சம்பாரிக்கும் ஒரு பெண். கொடுமை.
இப்படியும் சிலர்.
அப்புறம் என் பாட்டி 2003 காலமானார். என்னால் உடனே இந்தியா வர முடியவில்லை.
கஷ்டம். வேலை.
குழந்தை முயற்சி தோல்வி. இன்னொருவர் சரக்கு ட்ரை செய்தோம். ஒட்டவில்லை. எங்கள் இருவர் இடம் ப்ரோப்ளம் இல்லை. ஆனால் எதோ ஒரு கெமிகல் இம்பாலன்ஸ்.
இந்த வருடம், அடுத்த வருடம் என்று ஓடுகிறது.
மீண்டும் சந்திக்கிறேன்.
கோடீஸ்வர யோகம்
11 years ago

3 comments:
Very interesting!
Interesting blog. Keep writing. I hope you don't run out of stories soon. Your speed is astonishing.
Nice flow!
Post a Comment