Showing posts with label அப்டேட். Show all posts
Showing posts with label அப்டேட். Show all posts

Sunday, August 30, 2009

நெடு நாட்களுக்கு பிறகு

இன்று தான் கொஞ்சம் நேரம் கிடைத்தது. ஒரு மகிழ்ச்சியான மற்றும் குடும்பத்தில் சோகமான விஷயம்.

வேலையை விட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிறது. ஜூன் 30 கடைசி நாள் சம்பளத்தோடு! ஜோவின் கம்பெனியில் இன்வேச்ட்மேண்டுகளை பார்க்கிறேன். அடுத்த வருடம் செப்டம்பரில் சிறு இந்திய பிரான்ச் ஒன்று பெங்களூரில் ஓபன் செய்ய திட்டம். பணம் புழக்கம், பெரிய சம்பளம் இல்லாதது கொஞ்சம் கஷ்டம் தான். ( வேலை இல்லா திண்டாட்டம் )

தங்கையின் குடும்பம் இங்கு இருப்பதால் கொஞ்சம் உதவி - மகிழ்ச்சி. அப்பாவும் அம்மாவும், இந்த வருடத்தில் இனி இந்திய ட்ரிப் போகவில்லை. என்னோடு இருக்க வேண்டும்! நான் குடும்ப வழியில் இருக்கிறேன். நல்ல செய்தி டிசம்பர் கடைசிக்குள்!

***

சென்ற வாரம் ஜோவின் மாமா ( அரசியல்வாதி ) பாஸ்டனில் காலமானார். எழுபத்தி ஏழு வயது. ப்ரெயின் கேன்சர். :-(

***

இங்கு ஷாருக் கானுக்கு நடந்த அவமானம் குறித்து மிகவும் அதிகம் பேசியது அமெரிக்கர்கள் தான்.

ஏற்கனவே எழுதியிருக்கிறேன், அமெரிக்கவில் நுழையும் போது, அமெரிக்கன் சிடிசன் ஆன எனக்கே, ஜோவை அனுப்பி விட்டு, நான்கில் ஒரு முறை, என் திருமணம் , வேலை முதலியனவற்றை பற்றி கேட்பார்கள். கலர் வித்தியாசம்! என்ன செய்வது, இங்கு அனைவரும் பயந்தாங்கொள்ளிகள். அதுவும் செப்டம்பர் பதினொன்று பயம் இன்னும் பீதியை கிளப்புது!

***

இந்த வருடம் நவராத்ரி பெஸ்டிவலுக்கு நியூ ஜெர்சி செல்லபோவதில்லை. உடல் நிலை காரணம். அப்புறம், பழைய கலை இருக்காது, வேலை , சம்பளம் திண்டாட்டம்...

***

எனக்கு நிறைய கமன்ட்சுகள். அத்தனையும், ஏன் இத்தனை நாள் எழுதவில்லை என்று. ரொம்ப தான் பேன்ஸ் போல.

இப்போ எழுதிட்டேன். :-)

Friday, October 3, 2008

திவ்யா சாந்தி ஒரு அப்டேட்

இங்கே படித்து பாருங்கள்... எவ்வளவு அருமை கண்களில் நீர் வந்துவிட்டது. ஆபீஸில் பக்கத்தில் இருப்பவர், என்ன ஆயிற்று என்று கேட்டார்!

திங்கிங் ஆப் தட் வுமன் சாந்தி!

கொடுமை! நன்றி ரமேஷ்.

பீபில் மஸ்ட் ரீட் இட்.

ஒரு சம்மரி.


திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 1)

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் ௨)

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 3)



ரமேஷ் நீங்கள் ஏன் இதை ஒரு இ-பூக்காக வெளியிட கூடாது?