Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Tuesday, November 11, 2008

பாடல்கள்

மும்பையில் பாடல்கள் ஒரு வித மயக்கம் தரும் விஷயம்.

நேற்று ஸ்டாக் மார்கட் வீழ்ச்சி, வேலை பிசி என போயிற்று.

நேற்று இங்கே தாஜில் ஒரு பெரிய விருந்து. ஜோவின் நண்பர்கள் ..... பார்டி.

அப்போது வயோலின், பாரதனாட்யம் மற்றும் கவ்வாலி கலைஞர்களின் பாட்டு என்று போனது....

ஐந்நூறு ருபாய் நோட்டு மலையில்... (சுமார் லட்ச ருபாய் பரிசு) அந்த கவ்வாலி கலைஞர்களுக்கு நான்கு பேருக்கும் வந்திருக்கும். ஐம்பது பேர் தான் இருக்கும் வந்திருந்தவர்கள், எல்லாம் பர்சிலிருந்து இரண்டு மூன்று ஐந்நூறு ருபாய் நோட்டுக்கள் எடுத்து வீசியதை பார்த்தேன்.

அதில் கண் தெரியாத ஒருவர், பாகிஸ்தானியர் என்று ஒரு கேள்வி... பாடியதை கேட்டு மனம் நொறிங்கியது! லியாகத் கான்.. பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் மட்டும் வருகிறார்! சென்னையிலும் பாடியுள்ளாராம்...

ஜோதா அக்பர் சினிமா பாடலும் பாடினார்கள்...

சாலா (மச்சான்) என்று ஒரு பாடல்... ஹிந்தியில் கெட்டவார்த்தையாக உபயோகப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சாட்டையடி... அப்பாடல், எப்படி மச்சான்கள் மற்றொவருக்கு உதவி செய்து அன்பை வளர்க்கிர்றார்கள் என்று கண்ணீர் மல்க பாடியது அருமை.

இப்படி பணக்காரர்கள் பார்டிகளை நம்பி நிறைய பேர் வாழ்கிறார்கள். ஸ்டாக் மார்கட் வீழ்ச்சியால், அவர்களுக்கு தொழில் சரி இல்லை என்கிறார்கள்.