Showing posts with label நியூ யார்க்கில் பக்ரித். Show all posts
Showing posts with label நியூ யார்க்கில் பக்ரித். Show all posts

Tuesday, December 9, 2008

நியூ யார்க்கில் பக்ரித்

இன்று நிஜம்மாக நியூ யார்க்கில் பக்ரித் ....

எனது அபார்ட்மென்டில் இருக்கும் மொரோக்கோ நாட்டு எம்பஸ்ஸி தலைவர், இரவு விருந்திற்கு அழைத்திருக்கிறார். அவர் மனைவி டெல்லியில் படித்தவராம். ஹிந்தி பேசுவார். அப்படி பழக்கம். ஜிம்மில் கஷ்டப்பட்டு உடல் பயிற்சி செய்வார்...

நேற்று அங்கேயே தங்கி வேறு ஒரு வேலை. ஒபாமா வருகிறாராம், ஒரு மீட்டிங் இருக்கலாம் என்றார். எப்படியோ, நல்லது நடந்தால் சரி.

ஜோவின் வேலை இன்று மதியம் முடிந்துவிடும் என்பதால்...

ஹோட்டல் காலி செய்து விட்டு, ஒரு நாள் வாடகை மிச்சம்.... ;-) (எங்கள் அம்மா சொல்வது போல, பெண்கள் என்றால், எங்கு பார்த்தாலும் மிச்சம் பிடிப்பது தான்...)

மூன்று மணி ட்ரைன் பிடிக்கிறார். ஆறு மணிக்கு வீடு. சில சமயம் ப்ளைட் பிடிப்பதை விட ட்ரைன் அருமை. நாளை காலை இருவருக்கும் ட்ரைன். ரிடர்ன், வில்மிங்க்டன் வரை தான். ப்ளைட் சார்ஜ் தான். இந்த குளிர் வெதேரில், பெட்டர்.

ஆறரைக்கு பார்டி. ஒரு பத்து குடும்பம் மற்றும் அவர்கள் ஸ்தாப் வருவார்கள். பெரிய பெண்ட் ஹவுஸ். கொண்டாடுகிறார்கள்....

ஒரு எவனின் கவுன் புதியதாக, வாங்க வேண்டும். வின்டருக்கு தகுந்த மாதிரி. எப்படி இருந்தாலும், கிறிஸ்தமஸ் பார்டிக்கு ஒரு டிரஸ் எடுப்பேன். சாக்ஸ் என்ற டிசைனர்...

ஜோவிடம் சொன்னால், பட்டு சேலை கட்டு என்பார். அனேகமாக அது தான்.

இந்தியன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் மொரு மொரு சமோசா ஆர்டர் செய்து கொண்டு செல்ல வேண்டும்.

Happy Bakrid Celebrations! (I hope this is the correct way to greet!)