Showing posts with label மீண்டும் துபாயிலிருந்து. Show all posts
Showing posts with label மீண்டும் துபாயிலிருந்து. Show all posts

Tuesday, November 25, 2008

மீண்டும் துபாயிலிருந்து....

நேற்று நல்ல ப்ளைட். துபையிலும் சிறிது தூறல். மணல் காற்று என போகிறது.

ஜோவிற்கு ஒரு கால், எமிக்ரேசன் மிக விரைவில், தனி லைன். இந்திய இந்த அளவு வருமா?

நண்பர் ஷங்கர் குடும்பத்தோடு வந்து வரவேற்றார். பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. நியூ யார்க்கில் ரமேஷ் ரூம் மேட். 1991 டு 1994 அடிக்கடி சந்தித்த ஞாபகங்கள்... அப்புறம் அவர் கலிபோர்னியா சென்று விட்டார்... வயதான அப்பா அம்மா இருப்பதால்.. சில வருடம் முன் இந்தியா அருகில் இருக்க வேண்டும் என்று துபாயில் வேலை தேடி வந்து விட்டார்... ஒன்பது மணி இரவு தூக்க கலக்கம், குழந்தைகளும் வந்திருந்தார்கள். மறக்காமல், மும்பையில் சிறு டாய்ஸ் வாங்கியிருந்தேன்... அவர்கள் காரிலேயே, வீடு சென்றோம்.

எமிரேட்ஸ் கார், ஒரு மணி நேரம் முன்னால், சொல்ல வேண்டும். ஷங்கர் ட்ரோப் செய்வேன் என்றார். நன்றிகள்.

இரவு பத்து மணிக்கு துபாய் உள் ஓடும், பேக்வாடர்ஸ் (துபாய் கிரீக்) ஓடையில் மிதந்து உணவு. பன்னிரண்டு மணிக்கு வீடு வந்தவுடன் தூக்கம். நிறைய பேசினோம்.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து ரெடி ஆகி... நல்ல தூக்க கலக்கத்துடன்...

ஷங்கர் ஆறரை மணிக்கு ட்ராப் செய்தார். போர்டிங் கார்ட் இருந்ததால், எமிக்ரேசன் வேகம். யு.எஸ். பாஸ்போர்ட் தனி மரியாதை!

ஏர்போர்ட் ஷாபிங் ரொம்ப அருமை. சில நகைகள் வாங்கினேன்.

**********

இப்போது, எட்டரை மணி ப்ளைட்டுக்கு லவுஞ்சில் உட்கார்ந்து வெயிட்டிங். வயர்லெஸ் வைபை இலவசம், பிசினஸ் கிளாஸ் ஏரியாவில்.... கொஞ்ச நேரத்தில் போர்டிங்.

அந்த வயதான அம்மா, என்னை பார்த்தும் ஓடி வந்தார். ஏர்போர்டில் ஒரு ரூம் கொடுத்துள்ளார்கள். நல்ல வேலை எதுவும் ப்ராப்ளம் இல்லை.

பசிக்கிறது என்றார். ஒரு சாண்ட்விச்சும் காபியும் வாங்கி கொடுத்தேன். நான் ப்ளைட்டில் பார்த்துக்கொள்வேன்.

ஜோவிற்கு ஓர் கால். பிரிவு என்ன என்று நன்றாக தெரிகிறது.