Showing posts with label கலங்கும் கண்கள். Show all posts
Showing posts with label கலங்கும் கண்கள். Show all posts

Wednesday, November 12, 2008

கலங்கும் கண்கள்

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானவை?

இப்போது ஒரு உதவி என்ற போஸ்ட் போட்டேன். மனம் கலங்குகிறது.

காலையில் தான் கவ்வாலி பாடகர் பற்றி எழுதினேன். கலங்கும் கண்கள் ...

கடவுள் எல்லோருக்கும் ஒவ்வொன்று நன்மை தீமை என படைத்திருக்கிறார் இல்லையா?

இன்றும் மும்பை ஆபிஸ் வேலை.... இப்போது ரூமிர்ற்கு வந்து பத்து நிமிடம் தான் ஆகிறது... ஜோ எதோ சேனலில் நியூஸ் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு நண்பர் வருகிறார்... எட்டரை மணிக்கு டின்னெர் ...

பார்பகியூ நேசன் என்ற ஹோட்டல் சென்றோம் மத்தியானம் .... ஐஸ்வர்யா ராய் வீட்டு அருகில். கார் (வெஸ்ட்) என்ற இடத்தில் உள்ளது. வித்தியாசமான ஹோட்டல். வெஜிடேரியன் சுமார் தான். உங்கள் மேஜை மீது பார்பகியூ சமைத்து சாப்பிடலாம். என்ன சாப்பிட்ட பிறகு, வேலை எல்லாம் செய்ய முடியாது. உறக்கம் வந்து விடும்! கொர்... கொர்... ;-)

காரில் (ஏரியா), கார் பார்கிங் கொடுமை. என் டிரைவர், மொபையில் வைத்திருந்தார். அதனால், கிளம்பும் சமயம் கூப்பிடவுடன், எங்கிருந்தோ வந்து ஹோட்டல் முன் நின்றார்... காரில் உள்ளே எல்லா கொசு மையம். எனக்கு இப்ப ஜுரம் பயம். வண்டி நிறுத்துபவர், கொஞ்சம் கண்ணாடி மூடி நிறுத்தலாம் இல்லையா? எந்த குப்பை கூளத்தில் நிருத்தினாரோ? ஆபீஸில் சொரிந்து கொண்டு இருக்க முடியவில்லை.

மும்பை ஆபீஸில் எல்லோருக்கும் கவலை. சென்ற வருடம் போனஸ் கோடிகளில் அள்ளியவர்கள், இந்த வருடம் திவால் நிலைமையால் ஒன்றும் இல்லாமல் போகப்போகிறது! சமபளம் பரவாயில்லை.... ஆனாலும் வேலை பற்றி கலங்கும் கண்கள்...

நூற்றி ஐம்பது பேர் இருந்த ஆபிஸ், இப்போது நாற்பது பேர் மட்டும். எல்லோரும், இந்தியாவின் தனியார் நிறுவங்கள் மூலம் வேலை வாங்கிவிட்டார்கள்.

மும்பையில் கொஞ்சம் வெளி மாநிலத்தவர்களுக்கு கவலை என்று தான் தோன்றுகிறது... மேல் மட்டம் பரவாயில்லை. ஜோவின் கன் மேன் கூட பிஹார் மாநிலத்தவர் தான். மூளை இல்லாத மனிதர்கள் என்று திட்டுகிறார். என் அருகில் ராஜ் தாக்ரே வரட்டும், எனக்கு சுட லைசன்ஸ் இருக்குது என்கிறார்!

பஸ்ஸில் ஒருவர் சுட்டு விட்டதற்கு மாநில முதல் அமைச்சர் சப்பை பதில் கொடுப்பது... கேவலம்! கலங்கும் கண்கள் ...

இப்போதெல்லாம், நார்த் இந்தியன்ஸ் எல்லாம் கண் வைத்துள்ளார்கள், கண்ணீர் இல்லாமல் இருக்க.

*****

வியாழன் இரவு அபிஷேக் பச்சன் படம் ப்ரிவியு உண்டு. தோஸ்தானா. சிறப்பு அழைப்பு. சிலருக்கு மட்டும்! வெள்ளி சினிமா ரிலீஸ். நடிகர்கள் ஐஸ்வர்யா ராய், ஜான் ஏப்ரகாம், பிபாஷா பாசு மற்றும் பிரியங்கா சோப்ரா சந்திக்கும் வாய்ப்பு. அமிதாப் வருவார் என்று நினைக்கிறேன்.