நாட்கள் எப்படி விரைவாக கழிகிறது. எனக்கு வரும் கமன்ட்சுகள் இப்போது பரவாயில்லை.
தங்கை சொல்கிறாள்... "துணி இடுப்புக்கு பத்த மாட்டேங்குது...." ஒரே பாஸ்ட் புட். குழந்தைகள் இங்கு பீட்சா மற்றும் பரிசுக்கு அடிமை ஆகிறார்கள்.
எங்கள் குடும்பமே, நடந்தால், யார் இந்த குண்டர் படை என்று கிண்டல் செய்கிறார்கள்! ஜேக்சன் ஹைட்சில், தமிழ் வாலிபர்கள்... கண்டிப்பாக, ப்லோக் எழுதும் ஆட்கள் இருந்திருக்கலாம்....
ஒரே ஒரு வெள்ளைக்காரன், மற்றும் இந்திய குடும்பத்தினர்.... பார்த்தால், அடிக்கும் கிண்டல்... "நைஸ் கேட்சுரா மச்சான்.. இவளுக்கு வாழ்வு!" நான் கேட்ட ஒரு கமன்ட். சிலர் ஹிந்து கோவிலிலும் கமண்ட்ஸ் அடிப்பார்கள். வெள்ளை அமெரிக்கன்ஸ் அடிக்கும் கமண்ட்ஸ் இன்னும் வேறு, அசிஞமாக கொடுமையாக இருக்கும்.
ஜோ நேர் மாறாக ஒல்லிபிச்சான்... தாடி வேறு இப்போ....? பாவம்.
ஜனவரி இருபது ஒபாமா பதவியேற்ப்பு சமயத்தில் வாஷிங்க்டன் டிசி செல்கிறோம். புதன் இரவு வரை இருப்போம். பத்து லட்சம் மக்கள் வருகிறார்கள்.
அப்பா அம்மாவிற்கு இது புதுமையாக இருக்கும். செக்கூரிட்டி டிடேய்ளிங் இருப்பதால்... ஒயிட் ஹவ்ஸ் உள் செல்ல அனுமதி இல்லை.
டெமக்ரேடிக் அன்பர்களுக்கு பார்டி புதன் இரவு உண்டு. நாங்கள் செல்வோம். அப்பா அம்மா வில்மிங்க்டனில் தனியாக இருக்க வேண்டும். நாங்கள் இரவு எங்கள் வில்மிங்க்டன் வீட்டில் தங்குவோம்.
கோடீஸ்வர யோகம்
11 years ago