Showing posts with label புத்தாண்டில் உதவிகள். Show all posts
Showing posts with label புத்தாண்டில் உதவிகள். Show all posts

Sunday, January 4, 2009

புத்தாண்டில் உதவிகள்

மீண்டும் உதவி கேட்டு நிறைய பேர் எழுதுகிறார்கள்.

புத்தாண்டில் உதவிகள் செய்ய ஆசை தான்.

உங்கள் சொந்த முயற்சி முதல் நடக்கட்டும். பிறகு அடுத்தவர்களை நாடுங்கள். வாழ்த்துக்கள்.

******

அப்பா அம்மா தங்கை குடும்பத்தை அழைத்துக்கொண்டு நிறைய இடம் சுற்றினோம்.

டைம்ஸ் ஸ்கொயர் சென்று வந்தது தனி கதை. இந்தியாவின் வாசம் அங்கு இருந்தது.

குளிர் தான் அதிகம் இந்த சமயம். ஸ்னோ குறைவு தான்.

வரும் வெள்ளி ஜனவரி 9 இரவு தங்கை குடும்பம் இந்தியா திரும்புகிறார்கள். அப்பா அம்மா மற்றும் அவர்கள் நாளை முதல் தனியாக ஐந்து நாட்கள், சுற்றி பார்த்து ஷாப்பிங் செய்வார்கள், ஜோ சில சமயம் அழைத்து செல்வார். ஜோ கொஞ்சம் தமிழ் பேசுகிறார். இங்கிலீஷ் இருக்க பயம் என். அப்பாவும் அமெரிக்கன் ஆக்சன்ட் போட்டு பேசுகிறார். நல்ல தமாஸ்.

காலையில் ப்ரேக்பாஸ்ட் முடிந்தவுடன், வெளியே கிளம்ப வேண்டும். இரவு வரை வெளியே சுற்றுகிறோம்.

இன்று ஜேக்சன் ஹைட்ஸ் சென்று ஒரு ஏசியன் பப்பேவில் ஒரு கை பார்க்க வேண்டும். ட்ரெயினில் செல்கிறோம். அங்கு பார்க்கிங் கஷ்டம். மதியம் வீடு திரும்பியவுடன், ஒரு இந்திய வம்சாவளி நண்பர் வீட்டிற்க்கு எல்லோரும் பயணம். நியூ ஜெர்சி யூனியன் சிட்டியில் உள்ளது. ஒரு சிறு மலை மேல், பெரிய பங்களா. எல்லாவித பிசினசிலும் இன்வஷ்ட் செய்கிறார்.

இருபது வருடங்கள் மேல் ஆயிற்று, இந்தியாவிலிருந்து வந்து. இன்னும் திரும்பி செல்லவில்லை. ஏனோ விருப்பமில்லை என்கிறார்!