ஊரில் தான் கல்யாணம் செய்து செட்டில் ஆக ஆசை. இருந்தாலும், ஐஐஎம் வாய்ப்பு, உலகம் சுற்றும் வாய்ப்பு.... இப்போது ஜோவும் என் வாழ்வில்.
நான் தமிழ் மறக்காத காரணம், என் தமிழ் வாத்தியார், மணி சார்.
பாஸ் செய்தால் போதும், என்ற உணர்வு விலகி, படிப்பது நன்று என்று சொல்வது அவர்.
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, எல்லோரும், தமிழ் அல்லது ஹிந்தி வகுப்புகள் கட் செய்வார்கள். படிப்பதற்கு. மாஸ்டர்களும் விட்டு விடுவார்கள்.
நானே, காலையில் டுசன் செல்வேன். கணக்கு மற்றும் பிசிக்ஸ்/கெமிஸ்ட்ரி. இரண்டு மணி நேரம். ஐந்து மணிக்கு எழ வேண்டும். ஆறு மணி முதல், எட்டு வரை படிப்பு, வாரம் ஆறு நாட்கள். ஞாயிறு, இரண்டு மணி நேரம் பத்து மணி முதல்.
என் அப்பா தான் துணை வருவார். அவர் எக்ஸ்செர்சைஸ் செய்து, உடல் இளைத்து இப்போது நன்றாக இருக்கும் நிலை ஒரு காரணம் என்றாலும், மகள் படிக்க வேண்டும் என்று ஒரு கவலை.
என் தங்கைக்கும் துணை சென்றார்.
நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்ற விருப்பம்.
நாங்கள் இருவரும் வேறு வேறு இடத்திற்கு சென்ற போது, தினம் அப்படி செய்து உடல் பாதுகாத்து தொடர்கிறார்.
அது போக வீட்டில் மூன்று பெண்கள், அம்மா மற்றும் நானும், தங்கையும். அப்பா குறிப்பறிந்து உதவி செய்வார். காலை அப்பா நில்கிரிஸ் சென்றாலே, விஸ்பர் பாக்கேட் எடுத்து வைத்து விடுவாராம் கடைக்காரர்!
எங்கள் இன்ஜெநீரிங் சீட்களுக்கு அப்பா அலைந்த கதை தனி.
இப்போதும் அப்பா ஒரு ஆபத்பாந்தவன். எனக்கு இங்கு எதாவது சண்டை போல இருந்தால், ஒரு நிமிடம் பேசினால் போதும், மனம் ஆறிவிடும்.
ரமேஷ் எழுதிய ஒரு பதிவு இதை எழுத தூண்டியது...