Showing posts with label என்ன விஷயம். Show all posts
Showing posts with label என்ன விஷயம். Show all posts

Friday, November 7, 2008

என்ன விஷயம்

முதல் நண்பருக்கு நன்றி. தேங்க்ஸ். இங்கே பாருங்கள். படித்ததில் பிடித்தது...

முதலில் கமண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி, சிலது மட்டும் தான் அனுமதித்து உள்ளேன்... எல்லாம் பர்சனல் கேள்விகள் ... அது தான்.

முதலில், என் போட்டோ ஒரு இரண்டு நாள் தான் ப்ளோகில் இருந்தது, எடுத்து விட்டேன், just being personal!

நான் என் வேலை விட்டது ஒரு முஸுஅல் அண்டேர்ஷ்டண்டிங் படி. ;-)

இந்த வருடம் போனஸ் இல்லை. பரவாயில்லை. வேலை விட்டாக வேண்டிய கட்டாயம். டிசம்பர் 31 அபிசியல் கடைசி வேலை நாள், ஆபீஸில் கடைசி நாள் டிசம்பர் 12. இருக்கும் லீவு...

ஜோ, வாஷிங்கடனில் நான்கு வருடம் இருக்கும் வாய்ப்பு அதிகம். ரொம்ப பிஸியாக இருப்பார், வெளி நாடு ட்ராவெல் என்று... சோனல் ஷா பற்றி இப்போது படித்துக்கொண்டு இருப்பீர்கள், ஜோவின் நெருங்கிய நண்பர். அதனால், நான் ஒரு ஐடி சம்பந்தப்பட்ட வேலை எடுக்க வேண்டும். ஈசி.

சென்னை கம்பனி வாய்ப்பு... இப்பொது வாங்கும் அதே சம்பளம், போனஸ் குறைவா என்பது சத்யா தான் சொல்ல வேண்டும். பெங்களூர் புது ஆபீஸில் இருக்கலாம், நிறைய காலம். பாதி நாள் இந்தியாவில், மிச்சம் அமெரிக்காவில். நியூ யார்க் அல்லது வாசிங்க்டன் டிசி. அதை விரும்புகிறேன். கைதர்ஸ்பார்கில் எங்கள் காண்டோ வீடு ஒன்று உள்ளது. அங்கு இருப்போம், சென்றால்!

It might work out! I will keep you guys posted!

*****

கோவையில் என்ன விஷயம்?

தலை வாழை இலை சாப்பாடு.. ஜோ விரும்பி சாபிட்டார். அட பிரதமன் அம்மா செய்திருந்தார்கள். கேட்டு கேட்டு சாப்பிட்டார். :-0

காலை ஆறு மணிக்கு குளிர் காற்றில் ஜாகிங் சென்றோம், எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்! ஜோ நல்ல டேன் ஆன ஆள், சற்று தூரத்தில் நார்த் இந்தியன் போல தான் தெரிவார்... கோவையில் நிறைய பாரினர்ஸ், ஜோ அவுட் ஆப் பிளேஸ் ஆக இருக்கமாட்டார்!

ஜக்கி வாசுதேவ் அமெரிக்கவில் இருப்பதாக செய்தி. அதனால், ஒரு விசிட் மட்டும் அங்கு நாளைக்கு, இப்போது கொஞ்ச நேரத்தில் மருதமலைக்கு.

இட்லி, தோசை, அரிசி புட்டு, சந்தவை + தேங்காய் பால், இனிப்பு வடை (கஜ்ஜாயம்) என டோடல் சவுத் இந்தியன் சாப்பாடு. நாங்கள் இருவர் இப்போது வெஜிடேரியன் ஆனதால், இங்கே நாளைக்கு நான் வெஜ் கட்.

முடிந்தவரை வெளியே இங்கே சாப்பிடமாடோம்! அம்மா கை வாகு அப்படி!

என்னோடு படித்த பெண், திருப்பூர்காரி, வருகிறாள் சற்று நேரத்தில் பார்க்க, சென்ற முறை பார்க்கவில்லை. தனி ஒருவளாக அமெரிக்கா, யுரோப் எல்லாம் சென்று ஆர்டர் பிடிக்கிறாள்... அவளும் அவள் கதைகளும் எழுத வேண்டும்! பெயர் சொல்லவில்லை.