Showing posts with label விரைவாய் சென்ற மணித்துளிகள். Show all posts
Showing posts with label விரைவாய் சென்ற மணித்துளிகள். Show all posts

Sunday, November 9, 2008

விரைவாய் சென்ற மணித்துளிகள்

எப்படி போகிறது டைம்! கோவையில் இரண்டு நைட் மட மடவென்று பறந்தது!

ஜெட்லைட் ப்ளைட் கூட்டம் தான். கோவை எப்போதும் போல பிசி...

ஒருவர் ஏர்போர்டில் இருந்தார். He was in a wheelchair. I asked him whether he was a Tamil blogger, without asking the name. He said, he is Kirtilal Kalidas Jewellery shop owners family! I felt bad about certain rich people in such state. Don't know whether I should!

என் பள்ளி மணி சார் வீட்டிற்க்கு சென்றேன். என் தமிழ் மாறாதது கண்டு ஆச்சிரியம் அடைந்தார். என் ப்லோக் பற்றி சொன்னேன், தெரியும் என்று சொன்னார்! ;-)

மதியம், எங்கள் எட்டிமடை தோப்பு (தோட்டத்தில்) சாப்பாடு. அம்மா சமையல் அருமை. வெஜ் பிரயாணி, சோயா ப்ரை. பைனாப்பிள் பாயசம்... இளநீர்.

நம்ம ஊர் போல வருமா? ஜோவும் இந்தியாவில் ரிடையர் ஆக வேண்டும் என்றார்!

நல்ல காற்று நல்ல நடை. அப்பாவும் ஜோவும் அப்படி என்னதான் பேசினார்கள் என்று தெரியவில்லை. ஜோ என்னிடம் பிறகு சொன்னார், யூர் டாட் இஸ் கிரேடேர் தன் மைன்! கொடுத்து வைத்தவர் அவர் தான்!

மூன்று மணிக்கு இஷா மையம் சென்றோம். ஒரு மணி நேரத்தில் சுற்றி பார்த்தோம். அருமையான இடம். ஒரு இரண்டு நாள் தங்க வேண்டும். ரிசார்ட் மாதிரி உள்ளது. லிங்க கோவில் அருமை. இருவருக்கு பத்தாயிரம் ஆகும்.

நல்ல கோவில். தியான மண்டபம் என்கிறார்கள். ஒரு வித அனுமாஷ்யம்!

***

இரவு டின்னெர் ஒன்றும் இல்லை. அம்மா பேக் செய்த தயிர் சாதம். ஜோவிற்கு வெஜ் சாண்ட்விட்ச். ஜூஸ் ப்ளைட்டில். காசு கொடுத்து வாங்க வேண்டும்!

இரண்டு நாளில் ஒரு கிலோ வெயிட் ஏறி விட்டது. ஜோ பாவம், இரண்டு கிலோ போல இறங்கி விட்டார். வயிறு ஆட்டம் கண்டது!

இப்போது ஹோட்டல் வந்து விட்டோம். தாஜ். கேட்வே ஆப் இந்தியா எதிரில். அருமையான வியு. ஜோ கம்பனி செலவு, அதனால், நல்ல ரூம். 400 டாலர் ஒரு இரவுக்கு. ஹோட்டலில் பிசினஸ் சென்டர் கொடுப்பார்கள். ஸ்டாடஸ் என்று ஒன்று உள்ளது. அது முக்கியம்.

நாளை விரிவான பதிவு போடுகிறேன். ஜோ போட்டோ கூடாது என்று சொல்லிவிட்டார்.