சில சமயம் காலை எழுவது ஒரு திருப்தியான விசயமாக இருக்கும்.
சூரியன் எழும் நேரம். நான் எப்போதும் ஆறு மணிக்கு எழுவேன். சில சமயம் வெய்யில் சுள் என்று முகத்தில் அடித்தவுடன் - நான் தூங்குவது கிழக்கு பார்த்து. முதல் ஈமெயில் செக். எதாவது எண்ணங்கள் இருந்தால் ஒரு நோட் (இப்போ ப்லோக்)
கையில் ஒரு கப் காபி, கதவடியில் விழும் நியூ பேபர்... நியூ யார்க் டைம்ஸ்... ஜார்ஜ் பஸின் கோமளித்தனங்கள், வாழ்க்கை எப்படி போகிறது.
சோகமே கிடையாது! If you live with material infatuation! என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு நடிகை. Good Will Hunting என்ற படத்தில் நடித்தவர். பாஸ்டன் காரர். இப்போது அவர் நாடகங்கள் (தியேட்டர், பிராட்வே) செய்து கொண்டு இருக்கிறார். வருடம் ஒரு பாய் பிரன்ட் என்று அவர்கள் வாழ்க்கை ஓடுது! தேடிரென்று ஒரு நாள் கல்யாணம் என்று அழைப்பு வரபோகிறது!
பழைய நடிகை, என் அப்பாவின் ட்ரீம் கேர்ள், சோபியா லாரென் யுஎஸ் வந்தால் இங்கு தான் இருக்கிறார். 70, 71, 72 மாடிகளில் இருபது எல்லாம் பெரிய ஜாம்பவான்கள். ஹெலிகாப்டரில் வந்து செல்லும் கோஸ்டி.
ஒரு முறை, களிச்டா ப்லோகர்ட் (Ally McBeal) உடன் ஹாரிசன் போர்ட் பார்த்தேன். கிழே ஒரு ரெஸ்டாரன்ட் உள்ளது, அதற்கு செல்வார்கள்.
அப்புறம் பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் நியூ யார்க் வந்தால் இங்கு தான் தங்குகிறார்கள்.
ஜெர்ரி சைன்பீல்ட் இங்கு தான் இருக்கிறார்.
இவர்கள் எல்லோரும் காலை சென்ட்ரல் பார்க் சென்று ஓடி வருவார்கள் (தூரத்தில் அவர்கள் பாடி கார்ட்ஸ் செல்வார்கள்).
நாளை ஒபாமாவுடன் ஒரு மீட்டிங் உள்ளது ஜோவிற்கு. எங்கு எப்படி தெரியாது. அவர் ப்ளைட் விவரம் சீக்ரட்.
இந்த வாரம் இறுதியில் நானும் ஜோவும் பாஸ்டனில், அவர் பெற்றோருடன். அவர் முதல் அங்கு சென்று விடுகிறார்! நான் வெள்ளி இரவு செல்வேன்.
இப்போது நல்ல வெதர், ஸ்வெட்டெர் வேண்டாம், 17 டிகிரி செல்சியஸ். 63' F. குளிர் காலம் ஆரம்பம்! கோவையில் மழையாம். இதே மாதிரி இருக்கும். நாளை மழை உண்டு இங்கே!
அப்புறம், கடந்த் எட்டு மணி நேரத்தில் நூற்றி ஐம்பது வாசகர்கள்!
கோடீஸ்வர யோகம்
11 years ago