Showing posts with label ஸ்வைன் ப்ளுவும் லண்டனும். Show all posts
Showing posts with label ஸ்வைன் ப்ளுவும் லண்டனும். Show all posts

Tuesday, April 28, 2009

ஸ்வைன் ப்ளுவும் லண்டனும்

ஸ்வைன் ப்ளு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் லண்டனில் கொடி கட்டி பறக்கிறது.

இங்கே படியுங்கள்....

பீப், போர்க் சாப்பிடும் மகளுக்கு தான் பயம், இருந்தாலும் தொற்று வியாதி ....

***********

பார்கலேய்ஸ் மெயின் ஆபீஸில் ( எங்கள் கம்பெனி புது ஓனர்) ஒரு அவசர மீட்டிங் இருந்ததால், நேற்று காலை லண்டனுக்கு பயணம் செய்தோம். வெள்ளி வரை இருப்போம். முடிந்தால் அப்படியே பாரிஸ், ரோம் மற்றும் வெனீஸ் பார்த்துவிட்டு, ஞாயிறு செல்வோம்.

அதிகாலை குளிரில் எழுந்து, லண்டன் வந்து சேரும் போது (எழு மணி நேரம் ப்ளைட்) இரவு ஆகிவிட்டது. ஆறு மணி. என் ஆபிஸ் ஆட்களுடன் நான் மட்டும் டின்னர் மீட்டிங் சென்றேன். சாட் போனில் மீட்டிங்.... இன்னும் ஒரு வருடம் கஷ்டம் தான். எகனாமி எப்போது மேலே வரும் என்பது ஒபாமாவின் கையில் தான் இருக்கு...

ஞாயிறு மதியம் தான் அழைப்பு வந்தது. டிக்கட் கஷ்டம். ப்ரைவேட் ஜெட்டுக்கு முயற்சி... ஜோவின் உதவியால், அவருடைய கம்பெனி ப்ரைவேட் ஜெட் கிடைத்தது. டல் சீசன். எனக்கு மட்டும் ரவுண்ட் ட்ரிப் எர்பேர் தான் (அந்த கணக்கு கொஞ்சம் விசித்திரம்). இருந்தாலும், இன்னும் கொஞ்சம் செலவு செய்தால்...மிச்சம் குடும்பத்திற்கு என கணக்கிட்டு, அப்பா, அம்மா மற்றும் தங்கை குடும்பம், ஆக மொத்தம் எங்கள் கணக்கில் எட்டு பேர், மற்றும் கம்பெனி ஆள் இருவர் என பயணம் (அவர்கள் வெள்ளி இரவு ரெகுலர் ப்ளைட்டில் நியூ யார்க் பயணம்).

குழந்தைகள் சமர்த்தாக இருந்தார்கள்.

லண்டனில், ஒரு சர்வீஸ் அபார்த்மன்ட் ஜோ ஏற்பாடு செய்திருந்தார். மூன்று பெட்ரூம்.

==================

இன்று இனி தான் கிளம்ப வேண்டும். மதியம், குடும்பத்துடன், சில இடங்களை அழைத்து சென்று பார்க்க வேண்டும். நண்பர் குடும்பம் (பஞ்சாபிஸ்) அழைத்துள்ளனர். ஒரு மிக பெரிய நிறுவனம் நடத்துகிறார். இது தான் முதன் முறை, இரண்டு குடும்பங்களுடன் அவர்கள் வீட்டிற்க்கு பயணம்.

எல்லாம் நல்லபடியாக இருந்தால், வெள்ளி மதியம் பாரிசில் இருப்போம்.

ஞாயிறு, மச்சான் இந்தியா செல்கிறார். தேர்தல் பார்த்துவிட்டு மே 17 வருவார்.

அப்பா அம்மாவும் நல்ல விலையில் டிக்கட் கிடைத்தால், ரோமிலிருந்து இந்தியா சென்று விட்டு (ஒரு கல்யாணம்) திரும்ப வருவார்கள். இன்னும் அவங்களுக்கு வோட்டு இருக்கு...