Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Monday, November 17, 2008

ஜோதிடம்

ஜோதிடம் என்றால் எனக்கு குறைவான நம்பிக்கை தான்.

நேற்று அம்மாவும் நானும் நூறு அடி ரோட்டில் இருக்கும் ஒரு நாடி ஜோதிடரை பார்க்க போனோம்.

டிரைவர் எங்களை இறக்கி விட்டு விட்டு சென்று விட்டார்... ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள்.

சரி, எப்படி பார்கிறார்கள்?

என் வலது கட்டை விரல் ரேகை எடுத்து, கட்டு தேடுகிறார்கள். ஆண்களுக்கு இடது கை கட்டை விரல் ரேகை.

பல காம்பிநேசனில் பெயர் முதல் எழுத்து வைத்து, என் அப்பா அம்மா பெயர், தங்கை பெயர் கரக்டாக வந்தது. கணவர் பெயர் "ஜா" என்ற எழுத்தில் வரும், வெளிநாட்டவர் என்றார். கல்யாண தேதி கிட்டத்தட்ட கரக்டாக சொன்னார்... "புது" என்று பேர் கொண்ட ஊரில் என்றார்.. நியூ யார்க்கில் ரேஜிச்டேர் மேரைஜ் டேட் குறிப்பாக சரி வரவில்லை. யு.எஸ்.கோவில் கல்யாணம் டேட், மருதமலை கல்யாணம் டேட் ஒன்று சரியில்லை. நாற்பது வயது முடியும் முன், இரண்டாம் கல்யாணம் நிச்சயம் உண்டு என்றார்... டெக்னிகலாக நடக்காது! சரி அடுத்து கணவர் எங்கிருந்து, பெயர் என்றேன்... இந்தியாவில் சொந்த ஊருக்கு அருகில், மலை பிரதேசம் ஆள், பெயர் 'வி'யில் தொடங்கும் என்றார். அவருக்கும் இரண்டாம் கல்யாணம் இது....

படிப்பு பற்றி ஒன்றும் டிகிரி பெயர் எல்லாம் சொல்லவில்லை. மேற்படிப்பு 1991 மட்டும் கரக்ட். வீட்டிற்கு வெளிய இருந்து படிப்பேன் என்றார்.

ஒவ்வொரு குறிப்பும் சரியா தவறா என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

என் ஜாதகமும் கொண்டு போய் இருந்தோம். சனி கிரகத்தை வைத்து பலன் சொல்வோம் என்றார். பெயர்ச்சி பலன்?

சொத்து, வெளிநாட்டு வாழ்க்கை, தானம் செய்வது, குழந்தை பாக்கியம் உண்டு போன்றவை சொன்னார். நிச்சயம் சில மாதங்களில் இந்தியாவில் தான் வேலை செய்வீர் என்றார்... ஒளி ஒலி துறை...வெளிநாட்டு தொடர்பு முடிந்துவிடும் என்றார்! என்ன ஆக போகிறதோ! நடப்பது நடக்கட்டும். மூன்று வயது குழந்தை ஒன்று தத்து எடுப்பீர்கள் என்றார்.

எதோ பரிகாரம், இன்று பேரூர் கோவில் செல்ல வேணும்.

கடைசி வரை ஜோதிடரிடம் ஒரு நம்பிக்கையும் நான் வைக்கவில்லை!