Showing posts with label ஸ்ரீ லங்கா. Show all posts
Showing posts with label ஸ்ரீ லங்கா. Show all posts

Tuesday, October 21, 2008

தமிழ் ஈழம் , ஸ்ரீ லங்கா

நான் தமிழ் ஈழம் பற்றி தெரிந்து கொண்டது, ரொம்ப கம்மி.

தமிழ் ஈழம் தனி நாடு போன்ற விஷயங்கள் எனக்கு புரியாது. ஆயுதம் எடுத்து போராடுவது தவறு என்று திரிகிறது. இந்தியாவிலும் மாவோயிஸ்டுகள் உள்ளனர்.

தூயாவின் அழைப்பு இங்கே!

எனக்கு தெரிந்த நினைவுகள், கோவையில், வா.யு.சி கிரௌண்டில் டென்ட் போட்டு ஈழம் மக்கள் இருந்தார்கள். 1983. நான் பத்தாம் வகுப்பு. என் பள்ளியில் உண்டியல் மூலம் பல ஆயிரங்கள் எம்.ஜி.ஆர். நிதிக்கு கொடுத்தோம். சிலர் புலிகள் என்றார்கள். கையில் பட்ட குண்டு காயங்கள் காட்டினார்கள்.

அப்புறம் தி வேர்ல்ட் பேமஸ் ராம் சேது (ராமர் திட்டு) பார்க்க சென்றது, அந்த லீவில் தான். ராமேச்வரத்தில் இருந்து கடலில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், திட்டு திட்டாய் பாறைகள். கற்பூரம் எல்லாம் ஏற்றினார்கள்.

கட்ச தீவு சென்று பீச்சில் லன்ச் சாப்பிட்டோம். ஸ்ரீ லங்கா பகுதி, ஆனால், இந்தியன்ஸ் அங்கு சென்று வருவார்கள். இப்போது எப்படி தெரியவில்லை. எங்கள் போட்டை, ஸ்ரீ லங்கன் நேவி இறங்கி பார்த்து நினைவில் உள்ளது. சிங்களம் பேசிக்கொண்டார்கள். எங்கள் போட் டிரைவர் நன்றாக சிங்களம் பேசினார். ரூபாய்கள் பரிமாறப்பட்டன.

காலேஜ் படிக்கும் போது 1987, ஸ்ரீ லங்கா டூர் சென்று வந்தோம். கொலோம்போவில் அப்பாவின் நண்பர்கள் இருந்தனர், துணிக்கடை. கண்டி சென்றோம். கால்லே சென்றோம். ப்ளைட்டில் எங்கள் பெயரில் மூன்று பெட்டிகள் எக்ஸ்ட்ரா புது துணிகள் எடுத்து சென்றோம். லுங்கி, வேஷ்டி, கதர் துணி கடத்தல்! அங்கு விலை அதிகம். அப்பா சொன்னார், அந்த துணி தான் சுற்றி பார்க்கும் செலவிற்கு என்று. திரும்பி வரும் போது, நிறைய டீ, மற்றும் லெமன் கிரீம் பிஸ்கட்ஸ் வாங்கி வந்தோம். சில மாதங்கள் அந்த பிஸ்கட்ஸ் இருந்தன.

நான் பார்த்த வரை, ஸ்ரீ லங்கா மிகவும் அமைதியான நாடு. புத்த பிட்சுக்கள்...

கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் படம் தான் அங்கு நடப்பதை வேறு விதமாக காட்டியது. பயமாக உள்ளது. குழந்தைகள். சொல்ஜர்கள். தேவையா?

எனது அபார்ட்மென்ட் கம்ப்லேக்ஸ்யில் சிலர் வேலை செய்கிறார்கள். போலிஸ் வந்து அவர்களை செக் செய்து செல்லும். அசய்லம் வாங்கியவர்கள்.

எல்லாம் நல்ல படியாக, அமைதி தீர்வு கிடைக்க, மருதமலை ஆண்டவன் அருள் புரியட்டும்.