Showing posts with label என்னுடைய பயணம்.... Show all posts
Showing posts with label என்னுடைய பயணம்.... Show all posts

Thursday, March 26, 2009

என்னுடைய பயணம்...

ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம், சீக்கிரம் சோர்ந்து விடுவது.

பத்து நாட்கள், மறக்க முடியாதவை. நானே போட்ட ட்ரேவல் ப்ளேன் தான்.

எவ்வளவு நாடுகள்... மனிதர்கள், கலாச்சாரங்கள்!

***********

இன்னும் ஜெட்லாக் தீரவில்லை. இன்று காலை எழும் போது மணி ஆறு. ஓரளவு, உடம்பு பரவாயில்லை. நமது படுக்கையில் தூங்கினால் தானா சுகம்?

லண்டனில் ஒரு இரவு தங்கினேன். டின்னருக்கு நண்பர்கள் நிதி மற்றும் சிவா, குடும்பத்தோடு வந்திருந்தார்கள். இரவு வந்து தூங்கும் போது, அங்கு மணி ஒன்று. ஐந்து மணி நேரம் தூங்கியிருப்பேன், சரியான அசதி. ஜெட்லாக் மாற்றம் சிறிது தான். எட்டு மணிக்கு, ப்ளைட்டில். காலையில்வெகு சீக்கிரம் எழுந்தேன். ஆறரைக்கு கிளம்பி ஹீத்ரோவில்...

பிசினஸ் க்ளாஸ் லவுஞ்சில், அறை மணி நேரம், சிறிது மெயில் செக்... மப்பின்ஸ் ப்ரேக்பாஸ்ட். வெஷ்டர்ன் வேர்ல்ட் வந்தாச்சு... ப்ரேசிலியன் காபி கொடுமை.

எட்டு மணி நேரம் ப்ளைட். நன்றாக தூக்கம். இறங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் முன், எழுப்பி லன்ச் கொடுத்தார்கள். ஏசியன் வெஜிடேரியன் என்று கேட்டிருந்தேன். வாயில் வைக்க முடியுமா என்று இருந்தேன், பரவாயில்லை, லண்டனில் நல்ல இந்தியன் செப்கள் இருக்கிறார்கள், பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு.

ப்ளேனில் இருந்து ஒரு நிமிடம் ஜோவிற்கு கால். அவர் அழைக்க வந்திருந்தார்!

புதன் மதியம் வீட்டிற்க்கு வந்தவுடன், ஒரு மணி நேரத்தில் ஆபீஸில் இருந்தேன். நான்கு மணி நேரம் ஆனது, ட்ரேவல் ரிப்போர்ட் சப்மிட் செய்ய. கணக்கு வழக்கு.

வீட்டிற்க்கு வந்தவுடன் ஜோவோடு ஒரு மசால் தோசை செய்து சாப்பிட்டுவிட்டு, கஷ்டப்பட்டு, முழித்து, பத்து மணிக்கு எப்போதும் போல தூக்கம், அமெரிக்கன் டைம்லே. இடையில் அன்பேக்கிங்...

வீட்டில் மெயிட் இருப்பதால், பயன் அதிகம். ரோஷா வாழ்க! பத்து நாள் வீடு, பள பள என்று...

லண்டனில், மறக்காமல் கடைசியில் வாங்கியது, சோன் பாப்டி. அருமை. அருமை. மைசூர்பாக் ஒரு கிலோ பாக்கேட் சிவா கொடுத்தார். ஜோவிற்கு பிடிக்கும்!

இப்போது மீண்டும், காலை உணவு ஒட்மீலுடன், ப்ளாகிங். ஜோ சிரிக்கிறார். என்னம்மா என்று!

நிறைய பேர் கேட்கிறார்கள், ஜெருசலேம் ஏன் போகவில்லை என்று. பதில்: பயம் தான்... அடுத்த முறை ஜோவுடன் செல்வேன்.

***********

இப்போது தான் இதை படித்தேன்... தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு அப்பாவிடம் சொல்ல வேண்டும். அவர் தான், இந்த முறை எலெக்சன் சமயத்தில் இந்தியாவில் இருக்க போவதில்லையே!

நாளைக்கு... மீண்டும் எழுதுகிறேன்.