Showing posts with label கொலு. Show all posts
Showing posts with label கொலு. Show all posts

Sunday, October 5, 2008

நவராத்ரி

நவராத்ரி கொலு என்பது நாங்கள் (எங்கள் ஜாதி) வைப்பது கிடையாது. எனக்குதான் உலக ஜாதி ஆயிற்றே இப்போது.

சில பாம்பே சொந்தம் செய்தது பார்த்தேன். ஊரோடு ஒத்து வாழ்.

http://www.clas.ufl.edu/users/vasu/traditions/chapter16/navaratri2.htm

என் தங்கை வைக்கிறாளாம்... கோவையில். அம்மா வைப்பதில்லை. இப்போதுதான் பேசினேன். நல்ல வேலை ப்லோக் எழுவது தெரியாது. தங்கை மசாலா எழுதேரிய'னு கேட்கிறாள்.

http://www.kutcheribuzz.com/navarathri2005/gallery2005.htm

கொலு என்றால் தினம் தலைக்கு குளிக்க வேண்டும். பூஜை செய்ய வேண்டும். அக்டோபர் ஒன்பது விஜயதசமி வியாழன் வரை. புதன் அன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை. ஆபீஸில் சில நண்பர்கள் வீடு செல்ல வேண்டும்...எங்கள் டவர்ஸில் ஒரு தமிழ் குடும்பம் இருக்கின்றது.. அவர்கள் ஒரு பூசாரி அழைத்து சில ஸ்பெசல் அயிட்டம் செய்வார்கள். அந்த பூசாரி தட்டில் நூறு டாலர் கேட்பார். இன்று இரவு போக வேண்டும். சாரி அணிய ஒரு வாய்ப்பு. வள்ளைகள் எல்லாம் ஆச்சிரியமாக கேட்பார்கள்.

அப்புறம், பெண்கள் (சுமங்கலிகள்) அழைத்து குங்குமம், மஞ்சள் மற்றும் துணிகொடுக்க வேண்டும். நான்-வெஜ் என்றால் ஆகாது. அமெரிக்காவில் கஷ்டம். நான் செய்யவில்லை.

நான் இங்கு ஆஷா அச்சொசியசன் மூலம், துணி எடுத்து கொடுக்கிறேன். என்னால் முடிந்த உதவி.

இங்கேயும் எழையாக இந்தியன்ஸ் இருக்கிறார்கள். இந்தியா திரும்ப முடியாத நிலை. கைவிடப்பட்டவர்கள்... உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொல்லேலாம்.

அப்புறம் தாண்டியா இன்று இரவு இருக்கு. ஆறு மணி. பிளுஷிங்'இல் ஹிந்து (கணேஷா, கிருஷ்ணர்) கோவில். நிறைய வெள்ளைகள் வரும் இடம்.



இந்த வருடம் எந்த சினிமா ஆளும் வரவில்லை... ;-)