Showing posts with label ஒரு தினம். Show all posts
Showing posts with label ஒரு தினம். Show all posts

Thursday, November 27, 2008

ஒரு தினம்

ஒரு தினம் கழிந்தது. நல்ல சாப்பாடு. குடும்ப நிகழ்ச்சி.

இருந்தாலும் மன வருத்தம் அதிகம். வெளியில் சென்று வாரம் பயம் ஜாஸ்தி.

மும்பை ஆபிஸ் இரண்டு நாள் லீவு. எனக்கு வர வேண்டிய ரிபோர்ட்ஸ் வருமா?

ஊரிலிருந்து கால்...

அப்பா டிக்கட் டிசம்பர் 24 காலை கிடைத்துவிட்டது என்றார்கள். மும்பை வழி. துபாயிலிருந்து A 380 தான், ரிடர்னும் கூட. அப்பா அம்மா டிக்கட் ஓபன் ஆக வைத்துள்ளார்கள். எகனாமியில் 46000 ருபாய் மட்டும் என்றார்கள். வின்டர் பேர். ஒ.கே. தான். குழந்தைகளுக்கு 6000 குறைவு.

கோவை -> மும்பை -> துபாய் -> நியூ யார்க் ... உலகம் சிறிதாகுகிறது.

கிறிஸ்ட்மஸ் மதியம் நியூ யார்க்கில் இருப்பார்கள். இரவு டின்னருக்கு ஜோவின் அப்பா அம்மா வருகிறார்கள். நன்றாக இருக்கும். நானும் லீவில் இருப்பேன். அப்ச்டேட் நியூ யார்க் சென்று அல்பனி தாண்டி, ஸ்கி ரெசார்ட் ஒன்று கூட்டி செல்ல ப்ளான்...

பிலேதேல்பியா, ரெட்டிங், அல்லேண்டவ்ன், பிரின்ஸ்டன்... இங்கெல்லாம் செல்ல வேண்டும். தங்கை குடும்பம் ஜனவரி 9 இரவு 11 மணி எமிரேட்ஸ் டிக்கட். கோவையில் ஜனவரி 11, ஞாயிறு மதியம் இருப்பார்கள்.

அமெரிக்காவில் அதற்குள் நல்ல நிலைமை வந்தால் சரி தான்.

*****

ஜனவரி 15 அன்று காலை பிட்ட்ச்பர்கில் எங்கள் சொந்தத்தில் ஒரு கல்யாணம். இந்தியாவில் ரெஜிஸ்டர் மரேஜ் ஆகிவிட்டது. கே-விசா. அதனால் மீண்டும் யு.எஸில் கோவில் கல்யாணம். ஒரு மினிஸ்டர் ஆப் ஜஸ்டிஸ் மரேஜ் வேறு உள்ளது.

தம்பி கல்யாணம் செய்து டிவர்ஸ் செய்தவள், கணவனின் அண்ணனை கரம் பிடிக்கிறாள்.

என்ன உலகமடா இது? No one is an Outsider, but an Insider only!