Showing posts with label நேற்று நடந்த விருந்து. Show all posts
Showing posts with label நேற்று நடந்த விருந்து. Show all posts

Wednesday, December 10, 2008

நேற்று நடந்த விருந்து

நேற்று எங்கள் அபர்த்மேன்டில் நடந்த விருந்து பற்றி ட்ரெயினில் இருந்து எழுதுகிறேன். வை பை தான் அருமை. மெயில் செக், ப்லோக்கிங், செல் பேச்சு.. ஓடுகிறது.. வெளியில் இருக்கும் சத்தம், எங்கள் கூபேயில் கேட்கவில்லை. நல்ல கவனிப்பு. அருமையான ப்ரேக்பாஸ்ட். இப்போது பால்டிமோர் அருகில் இருக்கிறோம். ஒரு மணி நேரத்தில் வாஷிங்க்டன்.

மொத்தம் இருபது பேர் தான் வந்திருந்தார்கள் அபார்த்மன்ட் பார்டிக்கு. லோகல் ஆட்கள். பெரிய லெவல் என்று சொல்லமுடியாது... நாங்கள் மட்டும் தான் ஒரு மிக்சட்...கலர்ஸ்.. என் சேலை பற்றி .. மெரூன் கலர் பட்டு, எல்லோரும் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களும் சேலை கட்டுவார்கள், வேஷ்டி மாதிரி...

மொரோக்கோ நாட்டு வழக்கம், நல்ல கவனிப்பு. ஆல்கஹால் இல்லை.

நாங்கள் வெஜிடேரியன் என்பதால், முதலிலேயே சொல்லியிருந்தோம், அருமையான பலாபல் (வடை) சில வகை பிட ப்ரெட் இருந்தது... ஸ்வீட், கேக் போன்றவை.... நல்ல ஐஸ் கிரீம். நாசுரல்ஸ் ...

நான் சமோசா கொண்டு சென்றது சில நிமிடங்களில் காலி. எங்கே எங்கே என்று கேட்டார்கள்.

கிளம்பும் போது ஒரு நல்ல கிப்ட். வைரம் மோதிரம், கம்மல் எனக்கு. வைரம் வைத்த வாட்ச் ஜோவிற்கு. மகிழ்ச்சி.

கிறிஸ்தமஸ் சமயம், இந்த மொய் திருப்பி கொடுக்கப்படும்...