Showing posts with label 2006. Show all posts
Showing posts with label 2006. Show all posts

Sunday, October 12, 2008

கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள் ... அது தான் 2006 பற்றி சொல்லும் வாசகம்.

ஜோ ஒரு கம்பனி ஆரம்பித்தார். வென்சர் காபிடல்.

பலர் கூடி ஆளுக்கு இருபத்தி ஐந்து மில்லியன் போட்டு முன்னூறு மில்லியன் பண்ட்.

எனக்கும் ஜனவரியில் இன்னொரு மில்லியன் போனஸ். பிசினஸ் நன்று.

இருந்தாலும் பார்டிக்கள் , கிப்ட்கள் செலவு ஜாஸ்தி ஆனது.

எங்கள் கனா எல்லாம், போட்ட முதல் திரும்பி வர வேண்டும்... பல மடங்குகளாக. எங்களை நம்பி ஆட்கள்.

ஒரு மனதாக, நான் வேலை தொடர்வது என்று முடிவு செய்தேன். ஜோ சம்பளம் என்று எடுப்பது கிடையாது.

விப்ரோவில் வேலை பார்த்த ஒரு வைஸ் சேர்மன், ஐம்பத்து மில்லியன் ஜோவிடு நம்பினார். நிறைய பணம் இந்திய சாப்ட்வேர் கம்பனிகளில் உண்டு.

அப்புறம், ஜூலை மாதம் ஹவாய் பயணம். பல தீவுகள். ஹோனலூலூ... அம்சம். அங்கு ஒருவர் நண்பர். இருந்தாலம் ஒரு காடேஜ் எடுத்தோம். ஒரு நாளுக்கு ஆயிரம் டாலர்கள். அநியாயம். குடிக்க தண்ணீர் போட்டில். நிறைய தமிழ் ஸ்ரீலங்கன்ஸ் இருந்தார்கள். நன்கு வேலை செய்கிறார்கள் அங்கு.

அங்கு ஒரு ஹிந்து கோவில் உள்ளது.

உணவு வித்தியாசம். வெஜிடேரியன் கஷ்டம். இருந்தாலும் கிடைத்தது.

திரும்பி வந்த போது, கரு கருவென்று இருந்தேன். வெய்யில் வாடி விட்டது. நான் அமெரிக்கா வந்த பிறகு கையின் செய்த கலர், பொய் விட்டது. எங்க அம்மா சொல்வது போல் கருமசி.

எதற்கு பல கிரீம்கள் இருக்கு? ஒரு வகையில் தோல் பாதுகாக்கப்பட்டது.

அப்புறம், தீராத வயிற்று போக்கு. அன்கண்ட்ரோல்ட் ... சில சமயம் ஜாகிங் ஆபிசிலிருந்து சென்று வீடு, துணி எடுத்து செல்வேன், மாற்றி வருவேன். அந்த பேக் இருந்ததால் தப்பித்தேன்.

ஹவாய் சென்று வந்த எல்லோரும் சொல்வது. கொசுக்கடி வேறு! கஷ்டம்.

கடல் ஏரியாவில் ஏன் வெள்ளைக்காரர்கள் அதிகம் சுற்றுகிறார்கள்? உணவு. மீன். போதை. மற்றபடி எல்லாம் போர். குடிப்பது இல்லாவிட்டால், உணவு வேண்டும்... நல்ல முறையில். இது இரண்டும் இல்லாதவர்களுக்கு ஹனிமூன் செக்ஸ். புரிந்திருக்கும்.... மீண்டும் எட்டு வருடம் கழித்து சிறு பறவைகள் ஆனோம். ஒன்பது நாட்கள்! அட்டகாசம். என் உடல் ஒத்து உழைத்தது.

*****

ஜோவின் இன்வெஸ்ட்மன்த்ஸ் சுமாராக உள்ளது. பணம் போட்டவர்கள், அசல் எடுத்து விட்டார்கள். பரவாயில்லை. இப்போது இருப்பது, எப்போது மேலே வாரம்? தெரியாது. யாரும் ஸ்டாக் மார்கெட்டில் பணம் போடாதீர்கள், ப்ளீஸ்.

மீண்டும் சந்திக்கிறேன்.