Showing posts with label மீண்டும் சிங்கப்பூரில் சுற்றுலா. Show all posts
Showing posts with label மீண்டும் சிங்கப்பூரில் சுற்றுலா. Show all posts

Thursday, February 5, 2009

மீண்டும் சிங்கப்பூரில் சுற்றுலா

மீண்டும் சிங்கப்பூரில் சுற்றுலா முடித்துவிட்டு இப்போது தான் திரும்பி வந்தோம்.

காலை எழு மணிக்கு கிளம்பியவள், நான்கு மணிக்கு தான் ஜோ வர சொன்ன இடத்திற்கு சென்றேன். அது வரை தொண்டை வறண்ட நிலையில் ட்ரெயினிங், இடையில், பிட்சாவை சுவைத்துக்கொண்டே (மசாலா மெட்ராஸ் என்று சொன்னார், ஆர்டர் செய்தவர்...) பேசி முடித்தோம். அட்சரம் பிசகாமல், தொழில் எட்டு மணி நேரம் வேலை வாங்கி விடுகிறார்கள் சிங்கப்பூரில். நல்லது, இது தான் தேவை! (எனக்கு ட்ரேவல் டைம் கூட ஆபிஸ் வேலை தான்!)

நான்கரை மணிக்கு, மீண்டும் சிரங்கூன் சாலை சென்று, எங்கள் குடும்ப நண்பர் சுதீஷ்சை பார்த்துவிட்டு, ஆறு மணி அளவில் சபாரி இடத்தை அடைந்தோம். கோமலாசில் சாப்பிட்டோம். பீச் செல்லவில்லை. நாளை காலை கட்டாயம், ஆறு மணிக்கு எழுந்து சென்று வர வேண்டும். பதினோரு மணிக்கு தான் சில மணி நேரம் மீட்டிங். இரவு ஒன்பது மணி அளவில் சில்க் ஏர் கோவை ப்ளைட். ஆறு மணிக்கு ஹோட்டலை விட்டு கிளம்ப வேண்டும்.

சுதீஷ் எஸ்.ஏ.பி. தொழில் செய்கிறார், இது வரை டிகிரீ படித்து விட்டு ஐந்து வருடங்களாக கோவையில் மெகானிகல் எஞ்சினீர் ஆக இருந்தவர், பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் எஸ்.ஏ.பி. படித்து விட்டு, ஆறு மாதம் கழித்து மாதம் மூன்றாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் வாங்கும் வேலை.... பத்து மடங்கு சம்பளம், ஐந்து மடங்கு மிச்சம் என்றார். சிங்கப்பூரில் இருப்பதால், பெண் வருகிறது... அடுத்த வருடம் கல்யாணம் செய்வார். இந்த சம்பளம் பத்துமா?

*********

சபாரியில் நாங்கள் சாப்பிட்ட விவரம்.... இங்கே...